The Director of Elementary Education has ordered the school education department to dismiss the teachers who have been transferred from unit to unit on 31.05.2024!பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்
சென்னை6
5.5.6. 21243 / 3 / 1/2023 नं 28.02.2024
பொருள்:
பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துதல்
சார்பாக.
பார்வை:
1)தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 5.5.6.21243/43/01/23 26.6.23,06.07.2023 13.07.2023, 19.07.2023 0 17.08.2023 2)சென்னை-6 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.3355/Q1/ 2024 .15.02.2024
-0-
பார்வை-1ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி பிறதுறையில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய உரிய தடையின்மைச் சான்று பெற்று மாறுதல் மூலம் பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டது.
மேற்காண் கலந்தாய்வு அட்டவணைப்படி கடந்த 17.8.2023 அன்று அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு EMIS இணையதள வாயிலாக நடைபெற்று முடிந்துள்ளது.
இக்கலந்தாய்வில் தொடக்கக் கல்வி அலகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்றவர்களுக்கு உடனடியாக அவ்வாணையினை உரிய ஆசிரியர்களுக்கு சார்பு செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பார்வை-2ல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு
அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை
பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு
செய்திடவும், மாறுதல் பெற்ற உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளன்று
பணியில் சேரும் வகையில் பணிவிடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
Monday, April 22, 2024
New
பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
Unit to Unit Transfer
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.