1 முதல் 5 ஆம் வகுப்பு வரை – மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் - வினாத்தாள் நகல் எடுத்தல் நிதி விடுவித்தல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 19, 2024

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை – மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் - வினாத்தாள் நகல் எடுத்தல் நிதி விடுவித்தல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



1st to 5th Class – Conduct of Third Semester Examination – Question Paper Copying Fund Release – Dependency – Procedures of Director of Elementary Education மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் Beo login மூலம் download செய்து Brc மூலம் Print எடுத்து பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்து தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. பொருள்

பார்வை

ந.க.எண்.30657/கே2/2024, நாள்.15.03.2024

தொடக்கக் கல்வி - எண்ணும் எழுத்தும் திட்டம் - 2023-2024- 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை – மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் - வினாத்தாள் நகல் எடுத்தல் நிதி விடுவித்தல் - சார்பு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்.2753/அரி/EE/ஒபக/2023 நாள்.11.03.2024. ---------- அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பார்வையில் காணும் கடிதத்தில், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டும், அத்தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்குஏற்ப பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நிதியானது வட்டார வாரியாக கணக்கிடு செய்து மாவட்ட அளவில் தொகுத்து ரூ 2,43,60,453/- ஒதுக்கீடு செய்து இவ்வியக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்தேர்வினை நடத்திடும் பொறுப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார். தேர்விற்காண வினாத்தாட்களை (BEO) Login மூலமாக பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களைஅந்தந்த வட்டார வளமையங்களில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு பள்ளில் மாணவர் எண்ணிக்கைகேற்ப வினாத்தாட்களை பிரதி எடுக்கும் பணியினை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாம் பருவத் தேர்வுக்கான நிதியானது இணைப்பு 1ல் உள்ளவாறு 38 வருவாய் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. பெறப்படும் தொகையினை வட்டார வளமையத்தில் நகலெடுப்பதற்கான வினாத்தாள்களின் எண்ணிக்கை வினாத்தாள்களின் பக்க எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப வட்டார வளமையம் வாரியாக சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள இணைப்பு 2ல்உள்ளவாறு விடுவிக்குமாறும், இத்தேர்வினை எவ்வித இடர்பாடும் இன்றி இணைப்பு3ல் e:ik sectionik2ıselvam k2 எண்ணும் எழுத்தும் செலவினம் ssa.docx வழிக்காட்டுதல்களின்படி நடத்திடுமாறும், சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் அனைத்து மாவட்ட தலைமையிடத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு -

1. மாவட்டம் வாரியாக கணக்கிடப்பட்ட நிதி விவரம்.

2. வட்டார வாரியான கணக்கிடப்பட்ட நிதி விவரம்.(மின்னஞ்சலில்)

3. வழிக்காட்டுதல்கள்

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

அனைத்து மாவட்டங்கள் நகல்

தொடக்கக் கல்வி இயக்குநர்

மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06.

அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-09-

தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது



CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.