Puranam Ammal, who was sent back to the government school: Donation of land worth Rs.3.5 crore!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 6, 2024

Puranam Ammal, who was sent back to the government school: Donation of land worth Rs.3.5 crore!!



அரசுப் பள்ளிக்கு மீண்டும் அள்ளிக் கொடுத்த பூரணம் அம்மாள் : ரூ.3.5 கோடி மதிப்பிலான நிலம் தானம்!!

மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார்.

இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார்.

31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தார் பூரணம் அம்மாள். அதன்பிறகு மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசை மகள் ஜனனி துரதிருஷ்டவசமாக இறந்துபோனார்.

கணவர் மறைந்த பிறகு தனக்கு உறுதுணையாக இருந்த மகளும் காலமாகி விட்டதால் இடிந்து போனார் பூரணம்.

இதையடுத்து, தனது மகளின் நினைவாக, மதுரை கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அங்குள்ள அரசுப் பள்ளிக்கு பூரணம் அம்மாள் கடந்த மாதம் தானமாக கொடுத்தார்.

அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடி ஆகும். இதையடுத்து குடியரசு தினத்தில் முதல்வரின் கைகளால் அரசின் சிறப்பு விருதை அவர் பெற்றார்.

இந்த நிலையில் மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு தற்போது கூடுதலாக 91 சென்ட் நிலத்தை பூரணம் தற்போது வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு ரூ. 3.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.