ஆசிரியர்களை கவனியுங்க! Attention Teachers! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 25, 2024

ஆசிரியர்களை கவனியுங்க! Attention Teachers!



ஆசிரியர்களை கவனியுங்க! - தேத்தாகுடி பூங்குன்றன், வேதாரண்யம்.

இது உங்கள் இடம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம் பள குறைபாடு, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஒரே பணி, ஒரே கல்வித்தகுதி இருந்தும் 2009 ஜூன் 1க்கு முன் சேர்ந்தவர்களுக்கு ஒரு சம் பளமும், அதன்பிறகு சேர்ந்தவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் ரூ.3 ஆயிரத்து 170 குறைவாகவும் இருப்பதால், அதன்பிறகு பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களின் போது, இப் போதைய முதல்வர் நேரடியாக களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். தனது தேர்தல் அறிக் கையிலும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். உண்ணா விரதப் போராட்டங்களின் விளைவாக சம்பள முரண்பாட்டை தீர்க்க குழு அமைத்தனர். குழு அமைத்தும் முரண்பாட்டை நீக்க எந்த நடவடிக் கையும் இல்லாததால் மீண்டும் தொடர் உண் ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 3 மாதத்தில் தீர்வு காணப்படும் என்று கூறியதால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 3 மாதமும் கடந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் இப்போது பள் ளியை புறக்கணித்து முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தனது தேர்தல் வாக்குறு தியை உடனே நிறைவேற்றி இடைநிலை ஆசி ரியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.