ஜாக்டோ - ஜியோவுக்கு கடும் எதிர்ப்பு பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் Government employees and teachers are strongly opposed to Jacto-Jio - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 14, 2024

ஜாக்டோ - ஜியோவுக்கு கடும் எதிர்ப்பு பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் Government employees and teachers are strongly opposed to Jacto-Jio



ஜாக்டோ - ஜியோவுக்கு கடும் எதிர்ப்பு பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் Government employees and teachers are strongly opposed to Jacto-Jio

பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச ' கோரிக்கையை வலியுறுத்தி இன்று நடைபெறுவதாக இருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ நேற்று வாபஸ் பெற்றது.

இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆசிரியர் வெளியிட்ட பதிவு சமூகவலைதளங்க ளில் வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் :

ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிக்கும் போதெல்லாம் வட்டார அளவில் களத்தில் நின்று பணியாற்றும் முன்களப் போராளிகளான நாங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் பணியாற்றும் பணியாளர் கள் அல்ல என்பதனை முதலில் உணர்ந்து கொள்ளு ங்கள். உயர்மட்டக் கூட் டம் என்று நீங்கள் ஏ.சி. அறையில் அமர்ந்து கொ ண்டு அறிவிக்கும் போராட் டங்களுக்கு வேகாத வெயி லில் சென்று அணி திரட் டும் எங்களின் வேதனை உங்களுக்கு தெரியுமா?

போராட்டம் வாபஸ். கோட்டை நோக்கி பேரணி என்று சொல்லி விட்டு எல்லாரும் சென்னை நோ க்கி புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் திடீரென வாபஸ் வாங்கினீர்கள். எல்லாரும் எதிர்ப்பு தெரி வித்த நிலையில் வாழ்வு ரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் ஒன்றை நடத்தி பெற்ற அந்த 12 கோரிக் கைகள் இன்று வரை முழு மையாக நிறைவேற வில்லை. இப்போது 2வது தடவையாக போராட்டம் கடைசி நேரத்தில் வாபஸ்

வாங்கப்பட்டுள்ளது. இதிலும் உங்கள் ஊடக சந்திப்பு ஏற்கக் கூடியதாக இருக்கிறதா? எம் இரு கண்கள் போன்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளான பழைய பென்ஷன் வழங் குதல், இடைநிலை ஆசி ரியர் சம்பள முரண்பாடு களைதல் என்பதெல்லாம் இருக்க அதையெல்லாம் குறிப்பிடாமல் நிதி சார்ந்த ஏதாவது ஒன்றை நிறை வேற்றினால் போதும் என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.