ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு - Re-employment of retired teachers - Kalviseithi Official

Latest

Monday, November 20, 2023

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு - Re-employment of retired teachersஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு Re-employment of retired teachers

* ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.

* மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரிய தர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை பள்ளி கல்வி நேரடி துறை, 2023-24ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவதற்கு அல்லது மண்டல நேரடி ஆள்சேர்ப்பு மூலம் பணியி டங்கள் நிரப்பப்ப படும் வரை இதில் எது முந் தையதோ அதுவரை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிப் போர் 1.7.2023 தேதியின்படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியமனத்தின்போது, அவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 22 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியில் ஈடுப டுத்தப்படுவார்கள். ஆர்வ முள்ளவர்கள் மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.