Request to the Secretary of School Education to provide guidance through mental health counselors to guide students prone to bad habits - தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் மாணவர்களை நல் வழிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் என ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் - INTEGRATED SPECIAL TEACHERS ASSOCIATION - 21.11.2023
பெறுநர்,
உயர்திரு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தலைமை செயலகம் சென்னை.
பொருள்: பள்ளி மாணவர்களின் ஒழுக்க நலன் - சார்ந்து
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம், அரசுப் பள்ளிகளில் படித்து வரும் இலட்சக்கணக்கான மாணவர்களின் நலன் சார்ந்து இந்த கோரிக்கையை உங்களிடம் சமர்பிக்கிறோம். சமீப காலங்களில் மாணவர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். புகையிலை, போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கற்றல் திறனும் பாதிக்கப்பட்டு அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.
இது மட்டுமல்லாமல் சமூக ஊடகங்கள். திரைப்படங்களின் தாக்கங்களால் பிஞ்சுப் பருவத்திலேயே காதல் வயப்படுவதும். காதல் தோல்வி என மாணவிகள் (ஆறாம் வகுப்பு முதலே) தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதும், சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் பாலியல் ரீதியான உறவுகளும் கூட மாணவ மாணவிகளிடம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.