ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 7, 2023

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களுடைய குறைகளை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Uploading of Grievances by Teachers and Non-Teaching Staff on EMIS Website – Director of School Education Procedures

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண். 044210/எப்/இ2/2023 நாள்: 06.11.2023

பொருள் : பள்ளிக்கல்வி - கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இப்பணி மேற்கொள்ள தொடர்பு அலுவலர் நியமனம் செய்தல் -சார்ந்து. பார்வை : சென்னை -06. மாநிலத் திட்ட இயக்குநர் ஆசிரியர் - மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - வழிகாட்டு நெறிமுறைகள்.

மேற்காண் பொருள் சார்ந்து மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் புலம் மூலம் குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்கள் தங்களது பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User name & Password) பயன்படுத்தி குறைகளை உள்ளீடு செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவித்தல் வேண்டும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களின் குறைகளை எவ்வித காலதாமதமின்றி உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டு அனைத்து அலுவலகங்களில் தொடர்பு அலுவலரை கட்டாயம் நியமனம் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் விண்ணப்பங்களை அறிக்கையாக தயார் செய்தல் வேண்டும்.

அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ளபடி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைதீர்ப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இது சார்ந்து மாநில அளவில் பணிகளை மேற்கொள்ள நிருவாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புக்கு:

திருமதி.E.ரேணுகா-நிர்வாக அலுவலர் (கைபேசி எண் - 8903830115) திரு.சக்கிரபாணி - உதவியாளர் (600 CL 6Todor-9944467157) இணைப்பு:

1. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காணொலிக்கான Link- https://www.youtube.com/watch?v=YTyppjY__dI

2, அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காணொலிக்கான link https://youtu.be/5TeqAKGhBgM



CLICK HERE TO DOWNLOAD INCOME TAX CALCULATOR

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.