மொழிப் பாடம் முடிந்தவுடன் சமூக அறிவியல் தேர்வு - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 30, 2023

மொழிப் பாடம் முடிந்தவுடன் சமூக அறிவியல் தேர்வு - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்



மொழிப் பாடம் முடிந்தவுடன் சமூக அறிவியல் தேர்வு; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சிவகங்கை : பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வில் 7,9ம் வகுப்புகளுக்கு மொழிப் பாடம் முடிந்தவுடன் சமூக அறிவியல் தேர்வு நடத்த தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டிச.11 முதல் மாநிலம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடக்க இருக்கிறது. இந்த காலங்களில் 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடக்கும். இதில் கடைசியாக சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு முதல் 7,9ம் வகுப்புகளுக்கு மட்டும் மொழிப் பாடங்களான தமிழும், ஆங்கிலத்தேர்வு முடிந்தவுடன் சமூக அறிவியல் தேர்வு நடத்த ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சேதுசெல்வம் கூறுகையில், மாநிலம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் காலங்காலமாக சமூக அறிவியல் தேர்வை இறுதி நாளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை நடத்தி சமூக அறிவியல் ஆசிரியர்களிடம் விடைத்தாள்கள் ஒப்படைக்கப் படுகின்றன. இவ்வழக்கத்தை மாற்றி 7 ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் மொழிப் பாடம் முடிந்தவுடன் சமூக அறிவியல் பாட தேர்வுகளை நடத்தினால் சமூக அறிவியல் ஆசிரியர்கள் தேர்வு நாட்களிலேயே பள்ளியில் இவ்விரண்டு வகுப்புகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடியும். இதுபோல் தான் தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் தங்களின் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து வருகிறார்கள். இவ்வசதியை சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இரண்டு வகுப்புக்காவது வழங்கிட வேண்டும், என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.