மன்ற செயல்பாடுகள் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் (2nd Term) நடத்துதல் சார்ந்து SPD செயல்முறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 21, 2023

மன்ற செயல்பாடுகள் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் (2nd Term) நடத்துதல் சார்ந்து SPD செயல்முறை



SPD process depends on conducting district level competitions (2nd Term) for successful students at school level - மன்ற செயல்பாடுகள் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் (2nd Term) நடத்துதல் சார்ந்து SPD செயல்முறைகள்

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் நடத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார , மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை- ( 1 ) ல் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரு பள்ளியிலிருந்து செப்டம்பர் , அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளி அளவில் நடைபெற்ற 10 போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவர்கள் , நவம்பர் மாதத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர் . வட்டார அளவிலான போட்டிகளை நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்கு முன் நடைபெற தெரிவிக்கப்பட்டுள்ளது .

இம்மாணவர்களை வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக ஓர் ஆசிரியர் பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது . இப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி செலவினம் , 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம் & நினைவு பரிசு , வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் , வட்டார அளவில் போட்டிகள் நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில் உள்ளவாறு ரூ .2,81,06,035 / ( ரூபாய் இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும் ) நிதி அனைத்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. இதில் அரசு நிடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உடன்வரும் ஆசிரியர்களுக்குமான போக்குவரத்து செலவின நிதி இணைப்பு-1ல் உள்ளவாறு சார்ந்த பள்ளிகளுக்கு SNA மூலம் விடுவிக்கப்படுகிறது, மீதமுள்ளசெலவினங்களுக்கான நிதியினை அனைத்து மாவட்டத்தில் உள்ள வட்டார வளமையங்களுக்கு SNA மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான செலவினங்கள் அப்பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படவேண்டும். இந்நிதியானது 'Youth & ECO club - elementary தலைப்பின் கீழ் விடுவிக்கப்படுகிறது.

எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் ஒன்றிய அளவிலான போட்டிகளுக்கு மேற்கூறியுள்ளவாறு செலவினங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SPD Proceedings

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.