25.11.2023 அன்று நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் மறியலானது 09.12.2023 அன்று நடைபெறும் - உயர்மட்டக்குழு கூட்டத் தீர்மானம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

25.11.2023 அன்று நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் மறியலானது 09.12.2023 அன்று நடைபெறும் - உயர்மட்டக்குழு கூட்டத் தீர்மானம்

25.11.2023 அன்று நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் மறியலானது 09.12.2023 அன்று நடைபெறும் - உயர்மட்டக்குழு கூட்டத் தீர்மானம் - Picket in Jakto Geo District Capitals scheduled for 25.11.2023 will be held on 09.12.2023 - High Level Committee Meeting Resolution

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 20.11.2023

20.11.2023 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத் தீர்மானம்

25.11.2023 அன்று நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ மாவட்டத் தலைநகரங்களில் மறியலானது 09.12.2023 அன்று நடைபெறும்

09.12.2023 அன்று நடைபெறவுள்ள மாவட்ட மறியல் போராட்டத்தினை மிகவும் எழுச்சியாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்மட்டக் குழு அமைப்பு நிர்வாகிகளுக்கும் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள்-உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 25.11.2023 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையையொட்டி, 13.11.2023 திங்கட்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவித்ததோடு, அதற்கு மாற்றாக ஈடுசெய்யும் அரசு அலுவல் நாளாக 18.11.2023 அன்று வேலைநாளாக அறிவித்தது. இதனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டது, ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டு 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் பெரும்பான்மையாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் அரசு ஊழியர்-பணியாளர்களும் பணியாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிக்கப்பட்டவர்கள் இப்பணிலிருந்து எந்தவகையிலும் விலக்கு பெற இயலாது. ஜாக்டோ ஜியோ மறியலில் அனைத்துத் தரப்பு ஆசிரியர்களும் அரசு ஊழியர்- பணியாளர்களும் முழுமையாக பங்கு பெற வேண்டும் என்ற அடிப்படையில், இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் 25.11.2023 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டத்தினை எதிர்வரும் 09.12.2023 அன்று நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாவட்ட மறியல் போராட்டத்தினை 09.12.2023 அன்று மிகவும் எழுச்சியாக அனைத்துத் தரப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் பங்கேற்போடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர்மட்டக் குழு அமைப்பு நிர்வாகிகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்-ஜாக்டோ ஜியோ

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.