பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான அரை நாள் பயிற்சி வழங்குதல் மற்றும் ரூ.4,01,625/- ரூபாய் நிதி விடுவித்தல் - சார்பு - செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 21, 2023

பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான அரை நாள் பயிற்சி வழங்குதல் மற்றும் ரூ.4,01,625/- ரூபாய் நிதி விடுவித்தல் - சார்பு - செயல்முறைகள்

திருவாரூர் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்

திருவாரூர் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர்.. முனைவர்.அ.புகழேந்தி

பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருவாரூர் மாவட்டம் பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான அரை நாள் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.

பார்வை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.1680/அ11/பமேகு/ ஒபக/2023, ποτ. 10.2023 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் .2009- இன்படி பள்ளி மற்றும் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளை அனைத்து வகையிலும் மேம்படுத்திக் குழுந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்திட சமூகத்தின் ஒரு அங்கமான பெற்றோர்களின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில், பார்வையின்படி பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பானது கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு குறித்தமுதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே, முதற்கட்டமாக மாநில அளவில் தெரிவு செய்யப்பட்ட 48 முதன்மைக் கருத்தாளர்களுக்கு (மாநிலப் பயிற்சி அலகு-STU) (BRTES: 41 மற்றும் DIET Faculties: 7) உண்டு உறைவிடப்பயிற்சியாக சேலம். ஏற்காட்டில் "நெறியாளுகைத்திறன் பயிற்சியானது 27.05.2023 முதல் 31.05.2023 வரை நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள் (மாவட்ட பயிற்சி அலகு DTU) பயிற்சியானது தெரிவு செய்யப்பட்ட BRTEs ஒரு வட்டாரத்திற்கு இருவர் மற்றும் SMC-DC ஒருவர் ஆகியோருக்கு இரண்டு நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக மண்டல அளவில் 14.09.2023 முதல் 12.10.2023 வரை நடத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTEs) மாவட்டக் கருத்தாளர்களைக் கொண்டு 15.11.2023 அன்று நடைபெற்றது. நான்காம் கட்டமாக வட்டார அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அரை நாள் பயிற்சியாக 16.11.2023 முதல் 08.12.2023 வரை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில திட்ட இயக்ககத்திலிருந்து இப்பயிற்சிக்காக ஒரு பள்ளிக்கு 5 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு (தலைவர். துணைத் தலைவர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர், ஆசிரியர் பிரதிநிதி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்) ஒரு நவருக்கு ரூ.85/- வீதம் 945 பள்ளிகளுக்கு ரூ.4,01,625/- (ரூபாய் நான்கு இலட்சத்து ஆயிரத்து அறுநுரற்று இருபத்து ஐந்து மட்டும்) இம்மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Strengthening School Management Committees Provision of half day training for School Management Committee members and release of funds of Rs.4,01,625/- - Procedural - Processes

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.