ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நாளை ( 15.10.2023 )மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 14, 2023

ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நாளை ( 15.10.2023 )மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நாளை மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

நாள்: 15.10.2023 ஞாயிறு நேரம்: காலை 9.30- 4.00 மணி வரை இடம் : கல்லறைத் தோட்டம் அருகில், திருச்சி சாலை திண்டுக்கல்.



கோரிக்கைகள்

1.அ. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக இரத்து செய்து பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்திடுக

ஆ. மத்திய அரசுக்கு இணையான நிலுவையில்லா அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு (EL Surrender) ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கிடுக!

2.அ. நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிடுக!

ஆ. தொடக்கக் கல்வித்துறையில் வட்டார முன்னுரிமை வழங்கும் முறையை கைவிட்டு அனைத்து பதவி உயர்வுகளுக்கும் மாநில முன்னுரிமை வழங்கிடுக !

3.அ. மாணவர்களின் கல்வி நலன் கருதி, அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திடுக !

ஆ. EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திடுக!

4.அ. தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலை சார்நிலைப் பணி விதிகளைத் திருத்தி நேரடி நியமனத்தில் 10% முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடுக !

ஆ. பயிற்சிகளில் ஆசிரியர்களை ஏதுவாளர்களாக நியமனம் செய்வதைக் கைவிடுக !

5.அ. தமிழ்நாட்டில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற TET தகுதித்தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.

ஆ. NHIS திட்டத்தில் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி செய்திடுக !

6.அ.10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் வழங்கிடுக !

ஆ. ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றிடுக !

7 அ. தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ கைவிடுக !

ஆ. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கிடுக!

இ. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிடுக!

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் மண்டல அளவிலான மாபெரும் தொடர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் பேரினமே அணி திரண்டு வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

வாருங்கள் வடம் பிடிப்போம்... வரலாற்றில் இடம் பிடிப்போம்....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.