தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - சுற்றறிக்கை நாள் 21-10-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 21, 2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - சுற்றறிக்கை நாள் 21-10-2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

சுற்றறிக்கை நாள் 21-10-2023

நமது பேரியக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்களே!

உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

தமிழ்நாட்டில் ஜேக்டோ-ஜியோ மீண்டும் வீறுகொண்டு எழுந்துள்ளது. நான்கு கட்ட போராட்டங்களை அது அறிவித்துள்ளது. இந்த நான்கு கட்டப் போராட்டங்களையும் மிகுந்த எழுச்சியுடன் நடத்தி முடிப்போம். அதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுத்து மீண்டும் ஒரு சரித்திரம் படைத்திடுவோம் வாரீர் என உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். 1.28.10.2023 சனிக்கிழமை ஜேக்டோ-ஜியோவின் மாவட்டக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்போம்

28.10.2023, சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், ஜேக்டோ-ஜியோவின் மாவட்டக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.

ஒரு சில மாவட்டங்களில் அந்தக் கூட்டங்களை கூட்டும் பொறுப்பு நமது சங்கத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில், நமது பொறுப்பாளர்கள் - பிற சங்கப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி - அந்த கூட்டத்திற்கான அழைப்பிதழை நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் அனுப்பி அக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முயற்சிக்க வேண்டும்.

2.1.11.2023, புதன்கிழமை - தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் – ஜேக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நமது சங்க உறுப்பினர்கள் - பெருந்திரளாக - தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். 3. 25.11.2023, சனிக்கிழமை அன்று மாவட்டங்கள் தோறும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ - மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த மறியல் பேராட்டங்களில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.

4. இதற்கு பிறகும், நமது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மறுத்தால்- 28.12.2023 அன்று தலைமைச் செயலகத்தை அதாவது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிடும் ஆவேசப் போராட்டம் நடைபெறும். அதிலும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.

5.மேற்கூறிய இயக்கக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிட, நமது மாவட்டக் கழகங்கள் ஒவ்வொன்றும் மாவட்டப் பொதுக்குழுவை விரைந்து கூட்டி, கூட்டாக ஆலோசித்து, முடிவெடுத்து இயக்கக் கடமைகளை முழுமையாக நிறைவேற்றிட வெற்றிவாகை சூடிட ஆர்ப்பரித்து வாரீர் என உங்களை கனிவுடன் வேண்டுகிறோம். மேற்கூறிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவோம். அதன் மூலம் பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீட்டெடுப்போம். வெற்றி வாகை சூடுவோம் வாரீர் என உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.