சிமெண்ட் கழகத்தின் விற்பனைமுகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 10, 2023

சிமெண்ட் கழகத்தின் விற்பனைமுகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்



Dealer of Tamilnadu Cement Corporation, subsidized bank loan by TADCO for projects like construction of Aavinpalakam and purchase of agricultural land. - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனைமுகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவேரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர். ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ. 225 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ 375 இலட்சம்மானியமும் விடுவிக்கப்படும். 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகாணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு ) அல்லது அதிகப்பட்சம் ரூ 225 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ.375 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.500 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள் முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் ( www.tahdco.com ) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி.இ.ஆர் அவர்கள் தெரிவித்துள்ளார். செய்தி வெளியீடு தாட்கோ தலைமை அலுவலகம் சென்னை-18

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.