நாளை (01.11.2023) நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்கள் இணைத்தல் சார்ந்து SPD அவர்களின் செயல்முறைகள்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 31, 2023

நாளை (01.11.2023) நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்கள் இணைத்தல் சார்ந்து SPD அவர்களின் செயல்முறைகள்...



நாளை (01.11.2023) நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்கள் இணைத்தல் சார்ந்து SPD அவர்களின் செயல்முறைகள்...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்: 1680/A11/பமேகு/ஒபக/2023,

நாள்.30/10/2023 -

பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-பள்ளி மேலாண்மைக் குழு 2023 நவம்பர் 1ஆம் தேதி - சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை இணைத்தல் - சார்பு.

பார்வை: பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 2223 / C7 / பமேகு / ஒபக / 2022, நாள்: 21.07.2022

***** பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின் படி பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல் மற்றும் உயர்கல்வி தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

அதனடிப்படையில் வருகின்ற 2023, நவம்பர் மாதம் 1ஆம் தேதியன்று (புதன் கிழமை) நடைபெறவிருக்கும் சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது சம்பந்தமாகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

வழிகாட்டுதல்கள்:

1. 2023, நவம்பர் 1ஆம் தேதி (புதன் கிழமை) நடைபெறவிருக்கும் சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர், ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

2. பள்ளி வளர்ச்சி சார்ந்த தேவைகள், கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொகுத்து நடைபெறவிருக்கும் சிறப்புக் கிராமசபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு கிராமசபையில் கலந்தோலோசித்து உரிய தீர்மானங்களை இயற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் தீர்மானங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகமும், மக்களும் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்து தங்களின் பங்களிப்பை அளிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.

4. கடந்த கிராம சபைக் கூட்டத்தின் பள்ளித் தேவைகள் குறித்த தீர்மானங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து அடுத்தப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்.

5. இச்சிறப்புக் கிராம கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள வேண்டும். குழுக் ஒன்றாக இச்சிறப்புக் கிராமசபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் கூட்டத்தின் தீர்மானங்களை ஒரு முக்கிய கூட்டப்பொருளில் இணைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெறவிருக்கும் சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் தலைமையாசரியர், ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்டப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்குபெறுவதை பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் திட்ட அலுவலர்கள் அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாநிலத் திட்ட இயக்குநருக்காக

பெறுநர்:

1. மாவட்ட ஆட்சியர்கள்

2. முதன்மைக் கல்வி அலுவலர்கள்

3. மாவட்டத் திட்ட அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD SPD Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.