ஆண்டுக்கு நான்கு முறை SMC கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 14, 2023

ஆண்டுக்கு நான்கு முறை SMC கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநர்

ஆசிரியர்கள் கடமைகளை உணர வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர்

ஆண்டுக்கு நான்கு முறை எஸ்எம்சி கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியது: இடைநிலை ஆசிரியர்கள் 2006 ஜன1 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து மூவர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தீர்வு காணப்படும்.

எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர பிற அலுவல்சார் பதிவேற்றப் பணி கனிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர். அதேபோன்று எண்ணும் எழுத்தும் திட்டத்திலும் இணையதள பதிவேற்றம் இருக்காது. மேலும், தற்போது மாதந்தோறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்(எஸ்எம்சி) இனி ஆண்டுக்கு 4 முறை மட்டுமே கூட்டப்படும். உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும். உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப் பட்டு பருவகால ஊதிய உயர்வில்லாத 1,500 ஆசிரியர்களுக்கு இனி ஆண் டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

பி.லிட் முடித்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் அதன்பின்னர் பிஎட் படித்ததால் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடைகள் நீக்க நடவடிக்கை எடுக்கப் எ படும்.

இதுதவிர 58 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளர் பணி இடங்களை உருவாக்கி நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரி யும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு பணிமாறுதல் தரப்படும். பயிற்சிக ளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். என்பன உள்பட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக் கல்வித்துறை சார் பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தளர்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.