ஆசிரியர் பணிக்கு வயது உச்சவரம்பு 58 ஆக அதிகரிப்பு - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 24, 2023

ஆசிரியர் பணிக்கு வயது உச்சவரம்பு 58 ஆக அதிகரிப்பு - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்பு



ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி ~

ஆசிரியர் பணிக்கு வயது உச்சவரம்பு 58 ஆக அதிகரிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் வரவேற்று நன்றி
~~~

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் சூழ்நிலையில் பொது பிரிவினர்களுக்கு 45 வயதும் இதர பிரிவினர்களுக்கு 50 ஆகவும் வயது வரம்பு நிர்நியக்கப்பட்டு இருந்தது இதனால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பலர் 45 மற்றும் 50 வயது கடந்த இருக்கும் நிலையில் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்தது இதன் காரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று கடந்த 4ம் தேதி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் ஆசிரியர் பணிக்கு வயது உச்சவரம்பு உயர்த்துவதற்கான அரசாணை வெளிடப்படும் என அறிவித்தார் அதன்படி சொல்வதை செய்வோம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய பொது பிரிவினருக்கு 53 வயதும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் ( அ) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்வர்களுக்கு 58 வயதாகவும் வயது உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளிடப்பட்டுள்ளது ,இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்று நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் , இந்த அரசாணையால் தேர்ச்சி அடைந்தும் ஆசிரியர் பணிக்கிடைக்காமல் போயிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த பலருக்கு இதன் மூலம் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்கும் அதேபோன்று போட்டித் தேர்வையும் ரத்து செய்து உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவார் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறுவுருவமாக செயலாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்ற நம்பிக்கை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பிற்கு இருக்கிறது

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு


1 comment:

  1. இதுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்குது எப்படியும் போஸ்டிங் போடாத அது வரைக்கும் இழுத்துக்கொள்ளாமல் இது மாதிரி ஒரு திட்டம் கொண்டு வந்து இருக்காங்க அது மட்டும் இல்லாம டீச்சர் ட்ரைனிங் பிஎட் படிச்சு முடிச்ச உடனே தேர்வு வைத்து எழுத பாஸ் பண்ணுவாங்க 58 வயசு வரைக்கும் எக்ஸாம் எழுதி எழுதி பாஸ் பண்ணி போஸ்ட் பண்ண போறாங்களா அவங்க தான் இப்படி அனுப்புறாங்க நீங்களும் எந்த காரணத்தை வைத்து எதைச் சொன்னாலும் அதுக்கு வரவேற்பு அப்படிங்கற மாதிரி நீங்க இந்த மாதிரி முடிவோட இருக்கீங்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.