ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) அறிக்கை

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) அறிக்கை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) GOVERNMENT COLLEGE TEACHERS' MANRAM ( TAMILNADU)

கடந்த பத்து நாட்களாக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக அடிப்படையில் அமைதியான வழியில் போராடிய ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அவர்களை கைது செய்து குண்டு கட்டாக பேருந்தில் ஏற்றி சமுதாய கூடத்தில் அடைத்து வைத்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. சமவேளைக்கு சம ஊதியம் என்று நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து போராடிய இடைநிலை ஆசிரியர்களையும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்புதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களையும், ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றுவரை ஆசிரியப் பணி வழங்காததை கண்டித்தும் போராடிய ஆசிரியர்களை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவி போராட்டத்தை ஒடுக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி போதிக்கும் ஆசிரியர் சமூகத்தை இவ்வளவு கேவலமாக நடத்துவது இந்த அரசின் பாசிச முகத்தை காட்டுகிறது. எந்த நியாயமான கோரிக்கையை ஆதரித்து இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2019-ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்திற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக வருகை தந்து கோரிக்கைகளை ஆதரித்து போராட்டத்தை வாழ்த்தி பேசியது எங்கள் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அதே போராட்டத்தை தாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை ஒவ்வொரு ஆசிரியரும் உங்கள் முன்வைக்கின்றோம் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் என்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மேடைகளிலும் சமூக நீதி காக்கும் திராவிட மாடல் அரசு என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் தாங்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராடிய ஆசிரிய சங்க பிதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.