13 மொழிகளில் பாடத்திட்டம்: AICTE தலைவர் தகவல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 10, 2023

13 மொழிகளில் பாடத்திட்டம்: AICTE தலைவர் தகவல்!



13 மொழிகளில் பாடத்திட்டம்: ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்

''நம் நாட்டில், 13 மொழிகளில் இன்ஜினியரிங், டிப்ளமா பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீத்தாராம் தெரிவித்தார்.

தஞ்சாவூர், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையில் நேற்று முன்தினம் நடந்த, 37வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

தேசிய கல்வி கொள்கை வாயிலாக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, இந்த கொள்கை உள்ளது.

உலகம் முழுதும் அதிக பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதில், 40 சதவீதம் பெண்கள். நாடு முழுதும் பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில், 110 மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும், 100 மொபைல் ஆப் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு கட்டுப்பாட்டில், 3,600க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. ஆண்டிற்கு, 10 லட்சத்துக்கும் அதிகமான இன்ஜினியர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

மேலும், 3,400 டிப்ளமா கல்லுாரிகள் வாயிலாக, 10 லட்சம் பட்டயதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஐரோப்பா உட்பட ஒவ்வொரு நாடும் இன்ஜினியரிங் கல்வியை, தாய் மொழியில் வழங்குகிறது.

நம் நாட்டில் தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி உட்பட 13 மொழிகளில் இன்ஜினியரிங், டிப்ளமா பாடத்திட்டங்களை உருவாக்கி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இணையதளத்தில், இலவசமாக பாட புத்தகங்கள் கிடைக்கும் வகையில் செய்துள்ளோம்.

பல்வேறு வல்லுனர்களை கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டங்களை, ஐந்து மாதங்களில், 17 நாடுகளில் இருந்து, 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், பல்கலை வேந்தர் சேதுராமன், துணை வேந்தர் வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர்,-''நம் நாட்டில், 13 மொழிகளில் இன்ஜினியரிங், டிப்ளமா பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீத்தாராம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.