பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள்: AICTE வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 9, 2023

பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள்: AICTE வழிகாட்டுதல்கள் வெளியீடு



பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள்: AICTE வழிகாட்டுதல்கள் வெளியீடு Vocational Courses for Employees: AICTE Guidelines Issue பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள்: ஏஐசிடிஇ வழிகாட்டுதல்கள் வெளியீடு

பணியாற்றுவோருக்கான தொழில் படிப்புகள் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் அனுப்பிய சுற்றறிக்கை:

ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் பணியில் இருப்போருக்கு பிஇ, பிடெக், டிப்ளமா பிரிவில் தொழில்நுட்பப் படிப்புகளை பயிற்றுவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கென சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, என்பிஏ அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்விநிறுவனமும் 3 படிப்புகளை மட்டுமே வழங்க வேண்டும். ஒரு படிப்பில் 30 பேரை மட்டுமே சேர்க்க வேண்டும்.குறைந்தபட்சம் 10 பேராவது ஒரு படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.

இதில் சேருபவர்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து 50கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறான விதிகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.