அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை நடத்தும் சிறார் இதழ் (புது ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இவை அனைத்தும்) சந்தாதாரர் ஆக வேண்டுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 9, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை நடத்தும் சிறார் இதழ் (புது ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இவை அனைத்தும்) சந்தாதாரர் ஆக வேண்டுமா?

Do you want to subscribe to a children's magazine (Pudu Unchal, Thensittu, Dream Teacher) run by the Department of School Education for government school students?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை நடத்தும் சிறார் இதழ் (புது ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இவை அனைத்தும்) சந்தாதாரர் ஆக வேண்டுமா?

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான புதுஊஞ்சல் (4 முதல் 5ஆம் வகுப்பு வரை) , தேன்சிட்டு (6 முதல் 9ஆம் வகுப்பு வரை ) ஆகிய இரண்டு சிறார் இதழ்கள் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெளியிடப்படுகின்றன. இந்த இதழ்கள் மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை பங்களிக்கவும், பல்வேறு பள்ளி அளவிலான போட்டிகளில் ஒரு பகுதியாக இருக்கவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் உள்ள பலவிதமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இவ்விதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் , பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்காக கனவு ஆசிரியர் என்ற இதழை வெளியிடுகிறது. அதில் இன்போடெயின்மென்ட்(தகவல் மற்றும் பொழுதுபோக்கு) , கல்வி தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான தகவல்கள் ஆகியவை இடம்பெறும் . வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இணைந்து இந்த இதழ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் பங்களிக்கவும் கற்றுக்கொள்ளவும் முடியும் .

சந்தா விவரங்கள் எங்கள் இதழ்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் சிறப்பாக தொகுக்கப்பட்ட கதைகளையும்,சிறப்பு கலைப்படைப்புகளுடன் சிறந்த வாசிப்பையும் பெற்று மகிழுங்கள்!

ஒவ்வொரு இதழுக்குள்ளும், நீங்கள் தெரிந்துகொள்பவை:

இருமொழி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தமிழகத்தில் கல்வித்துறையின் நிகழ்வுகள் குறித்த சிறப்பு அம்சங்கள் பகுதி வாரியாக மாணவர்கள் பங்களித்த படைப்புகள் காமிக்ஸ், வண்ண வார்ப்புருக்கள்(templates) ,கலை மற்றும் கைவினை பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கான சிறுகதைகள் மாணவர்களுக்கான பல கவிதைகள், விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகள்

CLICK HERE TO சிறார் இதழ் அனைத்தும் சந்தாதாரர் ஆக Link

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.