நாளை முழு அடைப்புக்கு அழைப்பு - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 28, 2023

நாளை முழு அடைப்புக்கு அழைப்பு - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை

நாளை முழு அடைப்புக்கு அழைப்பு - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு - எல்லைப் பகுதியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை

பத்திரிக்கைச் செய்தி

நாள் 28.09.2023

தமிழ் நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இது சம்மந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளுர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கபடா வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர்அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 9498170430, 9498215407.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.