டிட்டோஜாக் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 9, 2023

டிட்டோஜாக் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை..

டிட்டோஜாக் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை..

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க வாய்ப்பினை ஏற்படுத்திட மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று ( 09-08-2023 ) சந்தித்து டிட்டோஜாக் கோரிக்கை..

மாண்புமிகு நிித்துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஜாக்டோ நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளடக்கிய தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் ஜாக்டோ அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேசினார். பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருக்கும் எமிஸ் வலைதள பதிவேற்ற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து பிரத்தியேக ஊழியர்களைக் கொண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கி பேசினர். மேலும் மதிப்பின் மீது நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் திரு .உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி காகர்லா உஷா ஐஏஎஸ் அவர்களையும் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்களிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் வே.மணிவாசகம், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் கி.மகேந்திரன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு.லெட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் இரா.குமார், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் துரைராஜ், கூட்டணியின் மேனாள் மாநிலத் தலைவர் சுதாகரன், மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் ஈவேரா, தஞ்சாவூர் குழந்தைசாமி, கள்ளக்குறிச்சி சீனிவாசன், சென்னை மாநகராட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


கோரிக்கைகளை பொறுமையுடன் கவனித்து கேட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர், மதிப்புமிகு கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்திகள் வெளிவரும் என தெரிவித்தனர்.

டிட்டோஜாக் கோரிக்கை கடிதம் -

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.