பெறுநர்
மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமைச் செயலகம், சென்னை-6.
மதிப்புடையீர், வணக்கம்.
பொருள்:
தொடக்கக்கல்வித் துறையில் மாணவர் நலன் காத்திட -ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தவும் - பிற பணிகளில் இருந்து விடுவிக்கவும் கோரி விண்ணப்பம் சமர்ப்பித்தல் சார்பு
ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்திட வேண்டுகோள் - EMIS பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்க கோரிக்கை
தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 8 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடபோதனையில் முழுமையாக ஈடுபட இயலாத வகையில் தொடர்ந்து EMIS செயலியில் பல்வேறு விபரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை மையக் கல்வி (CHILD CENTERED EDUCATION) என்பது இன்று TECHNICAL CENTERED EDUCATION ஆக மாற்றப்பட்டு விட்டது. இதனால் மாணவரின் கற்றல் அடைவு என்பது முழுமையடையாத வகையில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப்பணி தவிர பிற பணிகளில் குறிப்பாக EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டுமாய்ப் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
எண்ணும் - எழுத்தும் திட்டம் முழுமையாகக் கைவிட வேண்டுகிறோம்.
பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
கொரோனா கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவரின் கல்வித்தரத்தினை பாழடிக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை முற்றிலும் கைவிட கால இத்திட்டம் தற்போது மாணவர்களுக்கு ஏற்ற கல்வித்திட்டமல்ல என்பதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து இயக்கங்களும் ஆதாரத்தோடு எடுத்துக் கூறியுள்ளோம். CRC பயிற்சி - ஏதுவாளர்களாக ஆசிரியர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டுகோள்
ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கும்போது வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்களே பயிற்சி ஏதுவாளர்களாக செயல்பட்டு வந்த நிலைமாறி தற்போது முற்றிலும் ஆசிரியர்களே பயிற்சிக்கான ஏதுவாளர்களாக செயல்படும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிவாரியான தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த ஆசிரியப் பயிற்றுநர்கள் தற்போது அப்பணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, ஆசிரியர்களே பதிவேற்றம் செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பயிற்சிக்கான ஏதுவாளர்களாகச் செல்லவேண்டியுள்ளதால் ஆசிரியர்களின் பள்ளிப்பணி, கற்பித்தல் பணி முழுவதும் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்த்திட பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
SMC - பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே கூட்டிட வேண்டுகோள் பள்ளி மேலாண்மைக்குழு கடந்த ஆண்டில் மாதம் ஒருமுறை கூட்டப்பட்டு வந்தது. தற்போதுமாதம் இரண்டுமுறை கூட்டப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு ஆசிரியர்,ஒருநாள் முழுவதும் பெற்றோரை அழைப்பது, கூட்ட ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. மேலும் அடிக்கடிகூட்டப்படுவதால் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் இக்கூட்டங்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே மாதம் ஒருமுறை என்ற நடைமுறையினை மாற்றியமைத்து ஆண்டுக்கு மூன்று முறை என்ற அளவில் SMC கூட்டங்களைக் கூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி மேற்கண்ட எங்கள் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவித்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜேக் (TETO-JAC) பேரமைப்பு சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் மேலான விரைவு நடவடிக்கைக்கு நன்றியுடன்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.