தமிழ் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - 2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை காலநீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

தமிழ் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - 2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை காலநீட்டிப்பு



தமிழ் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - 2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை காலநீட்டிப்பு - Tamil Master's Degree and Five Year Integrated Tamil Master's Degree - Extension of Admission for 2023

2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை காலநீட்டிப்பு - அறிவிப்பு தமிழக அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் தமிழ் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான இப்பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாணவர்கள் நலன் கருதி 22.09.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு நேரடி சேர்க்கை (Spot Admission) தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட படிப்புகளில் பயில் விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர்(கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் அளித்தல் வேண்டும். மேலும் தகவல்பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.