பொறியியல் பட்டப்படிப்பு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

பொறியியல் பட்டப்படிப்பு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு



Application is invited for supplementary consultation for direct second year admission in Engineering Degree - பொறியியல் பட்டப்படிப்பு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2023-2024-ஆம் ஆண்டுக்கான B.E./B.Tech. இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை

மாணவர் சேர்க்கை. துணை கலந்தாய்வு பதிவு 19.08.2023 முதல் 22.08.2023 வரை.

மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் அவர்களின் அறிவுரையின்படி, தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ் காரைக்குடி, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்தும் இவ்வாண்டிற்கான பி.இ./பி.டெக். நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் இணைய வழியில் ஆன்லைன் (online) மூலம் 01.06.2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலமாகச் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கைகான இடங்களுக்கு 16594 மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் தகுதியுள்ள 15300 மாணாக்கர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டு, அவர்களது தரவரிசையும், அவர்களுக்கான இணையதள கலந்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது. விபரங்களும் http://www.tnlea.com இணையதளத்தில்

இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பித்தல் 01.06.2023 தொடங்கி 07.07.2023 அன்று நிறைவுபெற்றது. 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று சிறப்பு கலந்தாய்வும், 07.08.2023 முதல் 19.08.2023 வரை பொது கலந்தாய்வும் இணையதள வாயிலாக நிறைவுபெற்றது. பின்னர் B.Sc., மாணக்கர்களுக்கான Counselling 23.08.2023 அன்று நடைபெற உள்ளது.

பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க இயலாத மாணக்கர்கள் தற்பொழுது நடைபெற உள்ள துணை கலந்தாய்வு வாயிலாக விண்ணப்பிக்கலாம். துணை கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு 19.08.2023 முதல் 22.08.2023 வரை Online வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று 25.08.2023 அன்று துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பி.இ/பி.டெக். இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க தேவையில்லை. எனவே, மாணவர்கள் நேரில் மேலும், AICTE வெளியிட்டுள்ள 2020-ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, டிப்ளமா படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இரண்டாமாண்டு நேரடி பொறியியல் சேர்க்கையில் தாங்கள் விரும்பிய எந்தவொரு பாடப்பிரிவிலும் சேர்க்கை பெறலாம்.

கலந்தாய்விற்கு கீழ்க்காணும் இணையதளத்தினை பார்வையிடலாம். இதுகுறித்த விபரங்களையும் மற்றும் விருப்பமான கல்லூரி பதிவு முறைகளையும் நமது இணையதளத்தில் விளக்க காணொளி வாயிலாக காணலாம்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.