Ennum Ezhuthum 1.2.3rd Std - Union Level Training - Training Schedule for Second Semester
எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்பு - ஒன்றிய அளவிலான பயிற்சி 25, 26, 27.9.23 - September மூன்று நாட்கள் ..
2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான இரண்டாம் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக. ஆங்கிலம் கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை பில்லர் பயிற்சி மையம், பில்லர் பயிற்சி மையம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் 28.08.2023, 30.08.2023 ஆகிய 3 நாள்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இணைப்பு (2) இங் மாவட்ட வாரியாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் சார்ந்து முதன்மை கருத்தாளர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
நாகமயை மற்றும் 29.08.2023, இப்பெயர் பட்டியலில் உள்ள தகுந்த ஆர்வமிக்க, எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்கள். கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் DIET கல்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பயிற்சி நடைபெறும் முதல் நாளே பயிற்சி மையத்திற்கு இரவு 08.00 மணிக்குள் வருகை புரிவதற்கு ஏதுவாக பணி விடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 04.09.2023 05.09.2023 மற்றும் 07.09.2023 (06.09.2023.விடுமுறை) ஆகிய 3 நாட்களில் நடத்திடுமாறும், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 30.08.2023 அன்று ஆங்கிலம், 31.08.2023 அன்று கணிதம் மற்றும் 01.09.2023 அன்று தமிழ் என்று திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஒன்றிய அளவிலான பயிற்சியினை 25.09.2023, 26.09.2023 மற்றும் 27.09.2023 ஆகிய 3 நாட்களில் 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கருத்தாளர் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான செலவினத்தை அந்தந்த நிறுவன Programme and Activities நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. தங்கள் நிறுவன Programme and Activities நிதியில் போதிய நிதி இல்லாத பட்சத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் உத்தேச செலவின விவரத்துடன் நிதியினை கோரி பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
1. பயிற்சி நடைபெறும் மைய விவரம்
2. மாவட்ட வாரியான பங்கேற்பாளரின் பெயர் பட்டியல்.
1-3 training proceedings
CLICK HERE TO DOWNLOAD பயிற்சி கால அட்டவணை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.