4th & 5th Teachers எண்ணும் எழுத்தும் Training - Term 2 - இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை - SCERT Proceedings PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 18, 2023

4th & 5th Teachers எண்ணும் எழுத்தும் Training - Term 2 - இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை - SCERT Proceedings PDF



Ennum Ezhuthum 4th,5th Std - Union Level Training - Training Schedule for Second Semestern- எண்ணும் எழுத்தும் 4th,5th Std - ஒன்றிய அளவிலான பயிற்சி - இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை

எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5ம் வகுப்பு ஒன்றிய அளவிலான பயிற்சி 5, 6, 7.10.23 October மூன்று நாட்கள் ..

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை

பொருள்:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2023 2024 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி – DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப் செய்தல் தொடர்பாக. பார்வை :

2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சார்ந்த அறிவிப்பு நாள் 31.03.2023 பார்வையில் காணும் அறிவிப்பின்படி, 2023 2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம். கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இரண்டாம் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது.

4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக. தமிழ், ஆங்கிலம். கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியினை பில்லர் பயிற்சி மையம், நாகமலை புதுக்கோட்டை மதுரை மாவட்டத்தில் 31.06,2023, 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய 3 நாள்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இணைப்பு (2) இங் மாவட்ட வாரியாக தமிழ், ஆங்கிலம் கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் சார்ந்து முதன்மை கருத்தாளர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இப்பெயர் பட்டியலில் உள்ள தகுந்த ஆர்வமிக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் DET கவ்வியாளர்களை பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பயிற்சி நடைபெறும் முதல் நாளே பயிற்சி மையத்திற்கு இரவு 08.00 மணிக்குள் வருகை புரிவதற்கு எதுவாக பணி விடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகர்கள் மற்றும் வட்டார வளமைய அலுணர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும். எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 08.09.2023, 09.09.2023 மற்றும் 11.09.2023 ஆகிய 3 நாட்களில் நடத்திடுமாறும்.

அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுனை முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 0209:2023 அன்று தமிழ், 04.00.2023 அன்று ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் 06.09.2023 மற்றும் 07,09,2023 அன்று கணிதம் மற்றும் அறிவியல் என்று திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் ஈர்ந்த ஆசிரியர்களுக்கான பயிற்சியை 05.10.2023, 05.10-2023 மற்றும் 0730.2023 ஆகிய மூன்று நாட்கள் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு (1) இல் உள்ளவாறு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிவான பயிற்சிக்கான உத்தேச செலவினத்தை தங்கள் மாவட்டத்தில் உள்ள Programme and Activties நிதியில் இருந்து மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தங்கள் நிறுவன Programme and Activities நிதியில் போதிய நிதி இல்லாத பட்சத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் உந்தோ செலவின விரைத்துடன் நிதியினை கோரி பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

1. பயிற்சி நடைபெறும் மைய விவரம்

2. மாவட்ட வாரியான பங்கேற்பாளரின் பெயர் பட்டியல்,


4&5 training proceedings

CLICK HERE TO DOWNLOAD பயிற்சி கால அட்டவணை PDF

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.