ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதன் காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்வாக மாறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 5, 2023

ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதன் காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்வாக மாறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்

ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதன் காரணமாக ஈரோடு சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை 600006

ந.க.எண்.038392/w1/S2/2023 நாள்4.07.2023

பொருள் பள்ளிக்கல்வி- மேல்நிலைக்கல்விப் பணிஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.கோ.தாட்சாயினி என்பார் மீது பெறப்பட்ட புகார் அடிப்படையில் தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடுதல்-சார்பாக

பார்வை 1: ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் கடித ந.க.எண்.4097/அ1/2023 நாள்: 21.06.2023 ஈரோடு மாவட்டம், சிவகிரி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் திருமதி.கோ.தாட்சாயிணி என்பார் அனைத்து வகை ஆசியர்களுக்கான ஆயத்த கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளாலும், மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாகவும் பெறப்பட்டபுகார் சார்ந்து பெறப்பட்ட பார்வை-1 ல் காணும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதத்துடன் பெறப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தலைமையாசிரியரை மாணவர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்டம், தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.

மேற்படி தலைமையாசிரியர் உடனடியாக மாறுதல் அளிக்கப்பட்டுள்ள பள்ளியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். தொடர்புடைய தலைமையாசிரியர் தம்மிடம் உள்ள அனைத்து பொறுப்புகளையும் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியரிடம் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

பணி விடுவிப்பு மற்றும் பணி ஏற்பு அறிக்கையை இவ்வியக்ககத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.