சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை - தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 5, 2023

சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை - தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - Proceedings



சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை - தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - Proceedings - Uniforms are not worn properly by majority of students - CEO directive to Headmasters - Proceedings

பள்ளிக் கல்வி விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

மதுரை மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பார்வை 1 இல் காண் அரசாணையின்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை 2-இல் காண் மாநிலக் கணக்காயத் தணிக்கை அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பார்வை 3 இல் காண் செயல்முறைகள் / நேர்முக கடிதத்தில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் தினந்தோறும் அரசு வழங்கிய சீருடைகளை அணிந்து வர வேண்டுமென அனைத்து அரசு நிதியுதவி உதவிபெறும் பள்ளிகளுக்கும் அறிவுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 2024 ஆம் கல்வியாண்டில் புரட்சித் தலைவர் எம்ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளையே அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணாக்கர்கள் அணிந்து வர வேண்டுமென சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அதனை அரசு உதவிபெறும் பள்ளிகளில் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையினை அனுப்பிட பார்வை 5இல் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2023 2024 ஆம் கல்வியாண்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளையே அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணாக்கர்கள் அணிந்து வர வேண்டுமென சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அதனை அரசு உதவிபெறும் பள்ளிகளில் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையினை 1207.2023 அன்று மாலை 4 மணிக்குள் அனுப்பிட மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.