பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்



பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Teachers should not be appointed as facilitators in on-the-job training - Tamil Nadu Primary School Teachers' Alliance insists

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்து ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கினார். பணியிடைப்பயிற்சி அளிக்கும் பணியில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது. நிர்வாக காரணங்களால் பணியிறக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பத்திற்கு கால நீட்டிப்பு வேண்டும். மேலும் தூத்துக்குடி, தஞ்சாவூர், தேனி, சிவகங்கை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களிடம் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்கள் வழங்கினார். கோரிக்கை மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கோரிக்கை மனுக்களை அளித்து பேசிக் கொண்டிருந்த நிலையில் இயக்குநருக்கு வந்தடைந்த அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பத்திற்கான கால நீட்டிப்பு தகவலையும் தெரிவித்தார். பணியிடைப் பயிற்சி மற்றும் நிர்வாக காரணங்களால் பணியிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பதவி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனர் ஆகியோரிடமும் வழங்கப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்கள் இயக்குநரிடம் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் இ.எழில், திருவாரூர் ரெ.ஈவேரா ஆகியோர் உடன் இருந்தனர் CLICK HERE TO DOWNLOAD தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.