அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டித்து ஆணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.06.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டித்து ஆணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.06.07.2023

Order extending the time limit for uploading applications from unit to unit / change of department on EMIS website - Director of School Education Procedures d.06.07.2023 - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டித்து ஆணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.06.07.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.06.07.2023

பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து வழங்குதல்-சார்பு.

பார்வை:

1)தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.21243/சி3/இ1/2023 நாள்.26.6.2023

பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி பிறதுறையிலிருந்து முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு/துறை மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய தடையின்மைச் சான்று பெற்று மாறுதல் மூலம் பணிபுரிய ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலஅட்டவணை வெளியிடப்பட்டது.

மேற்காண் அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் தேதியினை கல்வி தகவல் மேலாண்மையில் (EMIS online) பதிவேற்றம் செய்ய ஏதுவாக 14.07.2023 வரை நீட்டித்து ஆணை வழங்கப்படுகிறது.

கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது


அலகு விட்டு அலகு மாறுதலில் செல்பவர்களுக்கு தடையின்மை சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களை தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரிடம் எடுத்துரைத்ததன் விளைவாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 14 .7 2.023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தேதி பிறகு அறிவிக்கப்படும் தடையின்மைச் சான்று பெறுவதில் யாருக்கும் சிக்கல்களில் இருந்தால் மாவட்ட செயலாளர்கள் வாயிலாக மாநில அமைப்பை தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.