மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு - பல்வேறு உதவித் தொகை விவரங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு - பல்வேறு உதவித் தொகை விவரங்கள்



*✅மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு...*

1) கல்வி உதவித் தொகை: ****

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 1,500 ரூபாய்

9-முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000 ரூபாய்

இளநிலை பட்டப்படிப்பு 3,000 ரூபாய்

முதுநில பட்டயப் படிப்பு 3,500 ரூபாய்

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை

வருமானச் சான்று

9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்

குடும்ப அட்டை நகல்



எப்போது விண்ணப்பிப்பது?

கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் 2) வங்கிக் கடன் உதவி ***

வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை

வருமானச் சான்று

குடும்ப அட்டை நகல்



எப்போது விண்ணப்பிப்பது?

ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை

குறிப்பு: பெட்டிக்கடை வங்கிக் கடனுக்கு அரசு மானியம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

3)மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும்

மாற்றுத் திறனாளி இல்லாதவர்களுக்கான நிதியுதவித் திட்டம்

***

அளிக்கப்படும் பணம் எவ்வளவு?

ரொக்கத் தொகை 25,000.

டிகிரி முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய், மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். கொடுக்கப்படும் தொகையில் பாதி தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்?

பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு

கை கால் ஊனமுற்ற (ஆர்த்தோ)திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

பேசும் திறன் அற்ற காது கேளாதோரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை

வருமானச் சான்று

வயதுச் சான்று

திருமணப் பத்திரிகை மற்றும் சான்று

குடும்ப அட்டை நகல்

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர். 4) மாற்றுத்

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை

***

மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை

குடும்ப அட்டை நகல்

ஊனத்தின் தன்மை 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்

. எப்போது விண்ணப்பிக்கலாம்? அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.



யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

5) இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?

***பார்வையற்றோர் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்.

இதர மாற்றுத் திறனாளிகள் இருப்பிடத்திலிருந்து பணி செய்யும் இடம், கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

தேசிய அடையாள அட்டை

விண்ணப்பம்

மூன்று புகைப்படங்கள்

கல்வி, தொழிற்கல்வி நிலையம் (அ) பணிபுரியும் இடத்தின் சான்று.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

மார்ச் மாதம் முதல்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

ஒரு மாதத்திற்குள். 6)தேசிய அடையாள அட்டை ** தேசிய அடையாள அட்டை பெற்றவர்களே மாற்றுத் திறனாளிகளாக உதவி பெற ஏற்றுக் கொள்ளப்படுவர். இந்த அட்டை பெற சிறப்பு மருத்துவர், மாற்றுத் திறனுடையோர் எனச் சான்று அளிக்க வேண்டும்.



இணைக்க வேண்டிய சான்றுகள்:

இரண்டு போட்டோ மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய விவரம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

ஒரே நாளில் வழங்கப்படும்.

7) உபகரணங்கள் உதவி

****

சிறப்பு மருத்துவர் கருத்துரைக்கு இணங்க கீழ்க்கண்ட உபகரண உதவி வழங்கப்படும்.

அ) மூன்று சக்கர வண்டி

ஆ) சக்கர நாற்காலி

இ) காதொலிக் கருவி

ஈ) பார்வையற்றோர் கைக்கடிகாரம்

உ) பார்வையற்றோர் ஊன்றுகோல், கண்ணாடி

ஊ) காலிப்பர்

எ) கைதாங்கி ஊன்றுகோல்

ஏ) செயற்கைக் கால்

ஐ) சூரியஒளி பேட்டரி

இணைக்க வேண்டிய சான்றுகள் :

தேசிய அடையாள அட்டை

விண்ணப்பம்

சிறப்பு மருத்துவச் சான்று

வருமானச் சான்று

எப்போது விண்ணப்பிக்கலாம்?

அனைத்து அரசு வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.



யாருக்கு விண்ணப்பிப்பது?

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.