சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்குதல் - தெளிவுரை கோரப்பட்டது - தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்குதல் - தெளிவுரை கோரப்பட்டது - தொடர்பாக.



Department of Social Welfare and Women's Rights - Revolution Leader MGR Nutrition Scheme - Promotion of Cook Assistants to Cooks - Clarification sought - Regards. - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்குதல் - தெளிவுரை கோரப்பட்டது - தொடர்பாக.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்கிட கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது.

பார்வை 1ல் காணும் அரசாணையின் படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க சமையல் உதவியாளர் நிலையிலிருந்து குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்தவராகவும், உ நன்கு சமைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மற்றும் சமையல் உதவியாளர் நிலையிலிருந்து சமையலராக பதவி உயர்வு வழங்கப்படும் போது அந்த சத்துணவு மையத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்குள் வசித்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாவட்டத்திலுள்ள தகுதியான சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பார்வை 2ல் காணும் அரசாணையின் படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தொடர்ந்து சமையலராக பதவி உயர்வு வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமையலர் நேரடி பணிநியமனத்திற்கு கல்வித் தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தொடர்ந்து சமையலராக பதவி உயர்வு வழங்கலாமெனவும் தெளிவாக கட 3/97/23 குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வை 3ல் காணும் அரசாணையின் படி மாவட்டங்களில் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க அரசு ஆணை (நிலை) எண் 125, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.உதி 2) துறை, நாள் 14.09.2008ல் குறிப்பிட்டுள்ளபடி, குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்தவராகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டங்களில் சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்கிட கல்வித்தகுதியினை கருதாமல், அரசு ஆணை (நிலை) எண் 125, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.உதி 2) துறை, நாள் 14.09.2008ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வை தொடர்ந்து வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.