மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 27, 2023

மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!!



மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (28.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!! Higher Secondary 1st Year Supplementary Exam Results Release Tomorrow (28.07.2023) Afternoon - Directorate of Government Examinations Press Release!!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.

ஜூன்/ஜூலை 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு விடைத்தாள் நகல்/ மறுகூட்டல்-1-க்கு விண்ணப்பித்தல் தொடர்பான தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் செய்திக்குறிப்பு

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்: ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள், தங்கள் தேர்வு முடிவினை 28.07.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலாக (Statement of Marks) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மேற்படி இணையதள முகவரிக்குள் சென்று Notification பகுதியில் “HR SEC FIRST YEAR JUNE/JULY 2023 - PROVISIONAL CERTIFICATE DOWNLOAD" என்ற வாசகத்தினை Click செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை (Statement of Marks) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 0108.2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும் 02 .08.2023 (புதன் கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல் - 1 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வெண் மற்றும் பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.


CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.