பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (26.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (26.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை (26.07.2023) பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - 10th Class Supplementary Exam Results Release Tomorrow (26.07.2023) Afternoon - Directorate of State Examinations Press Release
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

ஜூன்/ஜூலை 2023, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தான செய்திக்குறிப்பு

நடைபெற்ற, ஜூன்/ஜுலை 2023, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை,26.07.2023 (புதன்கிழமை) பிற்பகல்முதல் இணையதளத்திலிருந்து தங்களதுதேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து, தற்காலிகமதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறுஅறிவிக்கப்படுகிறது இணையதளத்தில் பத்தாம் வகுப்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் :

தேர்வர்கள் வருகிற 26.07.2023 (புதன்கிழமை) பிற்பகல் "SSLC SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 முதல் தமது மதிப்பெண் சான்றிதழை https://www.dge.tn.gov.in/ என்ற முகவரிக்குள் சென்று NDTHCATION பகுதியில் SSLC Exermination என்ற வாசகத்தை *Click " செய்தால் தோன்றும் பக்கத்தில்"SSLC SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023

PROVISIONAL MARK SHEET DOWNLOAD"என்ற வாசகத்தினை * Click " செய்து

தேர்வர்கள் தங்களது நேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth)

ஆகிய விவரங்களை பதிவு செய்து. தங்களது மதிப்பெண் சான்றிதழை பதியிறக்கம் செய்து கொள்ளம் என அறிவிக்கப்படுகிறது


மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஜூன்/ஜுலை 2023 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 01.08.2023 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 02.08.2023 ( புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர். இராணிப்பேட்டை மயிலாடுதுறை செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.