மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் - அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் - அரசாணை வெளியீடு!

Conduct of special recruitment test to provide 4% reservation for differently abled persons - Ordinance issued! - மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் - அரசாணை வெளியீடு!



மாற்றுத்திறனாளிகள் அறிவிப்புகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. துறை துறை மாற்றுத் திறனாளிகள் நல(மாதிந-3.2)த் நாள்: 24.07.2023 சோபகிருது, ஆடி 8, திருவள்ளுவர் ஆண்டு. 2054 அரசாணை (நிலை) எண்: 20 படிக்கப்பட்டது:

1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள்:17.04.2023,

2. மாற்றுத்திறனாளிகள் நல் ஆணையரின் எண்.3213/பணியமர்த்தல்/2023, நாள்.18.05.2023.

நகடித ஆணை-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது 17.04.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:- "மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்தத் துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்".

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அலுவலகங்களில் A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு.

அதில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் சட்டப்பிரிவு 34-இல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய உகந்தவைகளாக கண்டறியப்பட்ட பணியிடங்களில், மாற்றுத்திறன் வகையினரை உரிய தகுதிகளின் அடிப்படையில் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitmant Drive) நடத்தி, அனைத்து பணியிடங்களையும் ஓராண்டிற்குள் தெரிவு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்நேர்வில் ஏற்கனவே அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3.

தலைவர். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6. தலைவர், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், சென்னை-6. இயக்குநர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, சென்னை-32.

பதிவாளர், உயர்நீதிமன்றம், சென்னை-104.

அனைத்து மாவட்ட நீதிபதிகள் (மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வழியாக) அனைத்து அரசு ஆட்சேர்ப்பு தேர்வு முகமைகள் (மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வழியாக)

அனைத்து துறைத் தலைமை அலுவலகங்கள் / அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் / பொதுத் துறை நிறுவனங்கள் / வாரியங்கள் / கழகங்கள் / பல்கலைக் கழகங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் (மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வழியாக). நகங்:-

மாண்புமிகு முதலமைச்சர், அலுவலகம், சென்னை-9. மாண்புமிகு அமைச்சர் (நிதி (ம) ம.வ.மே) அலுவலகம், சென்னை - 01. தலைமைச் செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச்செயலாளர், சென்னை – 09. மனித வள மேலாண்மை(எஸ்)த் துறை, தலைமைச் செயலகம். சென்னை-09. இருப்புக் கோப்பு / உதிரி நகல் // ஆணைப்படி அனுப்பப்படுகிறது //
தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் தளர்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களை அந்தந்த துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிக்கொள்ளும் வகையில் அரசாணை (நிலை) எண்.151, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்ட (சந4)த் துறை, நாள்.16.10.2008-னை செயல்படுத்தும் விதமாக அனைத்துத் துறைகளும் மேற்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிட உரிய நடவடிக்கை ஆவன செய்யுமாறும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்துதல் தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பின்வருமாறு ஆணை வெளியிடுகிறது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 27(b) மற்றும் உட்பிரிவு (bbb)-இல் வரையறுக்கப்பட்டுள்ளதற்கிணங்க, அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அரசின் பல்வேறுத் துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒரு முறை மட்டுமே தளர்வுகள் வழங்கி அக்காலிப்பணியிடங்களை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4.மேலும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து இப்பணிகளின் காலாண்டு முன்னேற்ற அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்.

5. இவ்வாணை, மனித வள மேலாண்மைத் துறையின் அலுவல் சாரா எண்.5221677/எஸ்2/2023, நாள்.24.07.2023-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது..



CLICK HERE TO DOWNLOAD அரசாணைPDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.