பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு: பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு: பள்ளிக்கல்வித்துறை

Formation of special committee headed by District Collectors to eradicate dropout of school students - பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைப்பு..!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2023-24ல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100 சதவீதம் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். 1 முதல் 12ம் வகுப்பு வரை 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் தரவுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2023-24-ல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். 1 முதல் 12-ம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் தரவுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் இடைநின்றதற்கான காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார சூழல், குடும்பச் சூழல் காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இடைநிற்றலை தடுத்திடும் வகையில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாட்டின் கீழ், பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலைக் குறைக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் பெற்றோர் இடம் பெயர்வது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், தவறான பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் இடைநிற்றல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.அனைத்து மாணவர்களையும் கண்டுபிடித்து அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் அருகாமை பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல் நலப் பிரச்னைகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள், குழந்தை திருமணம், இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு சென்றது ஆகியவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லை போன்ற காரணங்களால் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.