நாட்டின் டாப் 10 கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

நாட்டின் டாப் 10 கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு

நாட்டின் டாப் 10 கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு!

சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த கல்வி நிறுவனத்துக்கான பட்டியல் வெளியீடு

சிறந்த கல்வி நிறுவனத்துக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சென்னை ஐஐடி முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாமிடமும், தில்லி ஐஐடி மூன்றாமிடமும் பெற்றுள்ளது.

ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், எய்ம்ஸ் தில்லி, ஐஐடி கராக்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி குவஹாட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறையே முதல் பத்து இடங்களை பெற்றுள்ளது. மேலும், சிறந்த பொறியியல் கல்லூரிக்கான பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து 5-ஆவது முறையாக நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வாகியுள்ளது. டாப் 10 சிறந்த பல்கலை.: தமிழகத்தின் 2 பல்கலைக்கழகம் தேர்வு!

சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பட்டியலில் தமிழகத்தின் 2 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், கோவை அமிர்தா பல்கலைக்கழகம் 7-ஆம் இடமும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 8-ஆம் இடம் பெற்றுள்ளது. இந்திய அறிவியல் நிறுவனம், ஜவஹர்லால் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. நாட்டின் டாப் 10 கல்லூரிகள்: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு! நாட்டின் சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி உள்ளிட்ட பிரிவுகளில் என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடமும், கோவை பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி நான்காமிடமும், லயோலா கல்லூரி 7-ஆம் இடமும் பெற்றுள்ளன.

மிரண்டா ஹவுஸ் கல்லூரி, தில்லி ஹிந்து கல்லூர் முறையே முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.