தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண்.181 - நாள் :05.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண்.181 - நாள் :05.06.2023



இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (வாலாயம்) எண்.181

நாள் :05.06.2023

ஆணை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIஐச் சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கு இயக்குநர் நியமனம்

தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலர்  கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக  இயக்குநராக ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலராக குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்திய நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.