வேளாண் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

வேளாண் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேளாண் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் (www.tnagfi.ucanapply.com) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூன் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.