அலுவலக பணிக்காக ஆசிரியர்கள் அலைக்கழிப்பு அரக்கோணம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் யூனியன் மற்றும் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் 120 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக ஆண்டு தோறும் மாணவர்களுக்கு தேவை யான நோட்டு, புத்தகம், பேக், காலணிகள், கலர் பென்சில் மற்றும் பாடத்துக்கு தேவையான துணை கருவிகள், விளையாட்டு பொருட்கள், சீருடைகள் போன்றவை வழங்கப்படுகிறது.
இந்த பொருட்கள் அனைத்தும் அந்ததந்த பள்ளிகளுக்கு நேரடி யாக ஒரு வேன் மூலம் எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்கான போக்குவரத்து செல வினங்களை அரசே வழங்குகிறது.
ஆனால் கரோனா தொற்றுக்கு பிறகு இந்த நடைமுறை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒரு யூனியனில் உள்ள ஏதேனும் ஒரு அரசு பள்ளி யில் மொத்தமாக பொருட்களை கொண்டு வந்து வைத்துவிடுகின் றனர். பின்னர் அந்தந்த பள்ளிகளே வந்து தங்களது சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், இன்று வரையும் போக்குவரத்துக்கான முழு தொகையை அரசு ஒதுக்கீடு செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிதி எங்குதான் போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
கரோனா தொற்றுக்கு பிறகு ஆசிரியர்களாகிய நாங்கள் தான் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சொந்த செலவில் எடுத்து வருகி றோம். ஆட்டோ அல்லது மினி வேன்களை எடுத்துக்கொண்டு போனால், இன்று ஒரு பாடப்புத் தகம் மட்டுமே வந்துள்ளது, இதை எடுத்துச் செல்லுங்கள், மீதமுள்ள புத்தகம் வந்தவுடன் தெரிவிக்கி றோம் எனக்கூறி அலைக்கழிக் கின்றனர். நோட்டு, புத்தகங்களை முழு மையாக வாங்குவதற்கே நாங்கள் 2.அல்லது 3 முறை செல்ல வேண் டியிருக்கிறது. மற்ற பொருட்களை வாங்க இன்னும் எத்தனை முறை செல்ல வேண்டுமோ என தெரிய வில்லை. அரக்கோணம் யூனிய னில் ஈராசிரியர்கள் பள்ளிகளும் உள்ளது. அதில் ஒரு ஆசிரியர் இது போன்ற பணிக்காக சென்று விட்டால் மீதி உள்ள ஒரே ஆசி ரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது சிரமமாகவுள்ளது. இவ்வாறு அவர்கள் ஆதங்கத் துடன் கூறினர்.
தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்குவதே மாண வர்களின் கல்வித்திறனை அதிக ரிக்கத்தான். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களை இது போன்ற அலு வலக பணிக்காக பயன்படுத்து வதால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வித்தி றன் கேள்வி குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.