தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

Classes will start on 12th for 6th to 12th class students in Tamil Nadu; It will start on 14th for class 1 to 5 - தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் தேதி வகுப்புகள் துவங்கும்; 1 முதல் 5ம் வகுப்பினருகு 14ம் தேதி துவங்கும்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்காக அரசு, தனியாா் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ம ஆலோசனை நடத்திய நிலையில் பள்ளிகள் திறப்பு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தும், பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்தது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால், கடந்த 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.