3000 பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் பெற மூன்று மாதங்களுக்கு pay authorisation வழங்க வேண்டி பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 25, 2023

3000 பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் பெற மூன்று மாதங்களுக்கு pay authorisation வழங்க வேண்டி பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம்

3000 பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் பெற மூன்று மாதங்களுக்கு pay authorisation வழங்க வேண்டி பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம்

Created Post இல் பணிபுரியும் 3000 பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் பெற மூன்று மாதங்களுக்கு pay authorisation வழங்க வேண்டி பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்

கடந்த 2022 மார்ச் மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது காலிப்பணியிடங்களுடன் 3000 Created Post களும், காலியாக உள்ள பணியிடங்களாக காண்பிக்கப்பட்டதால் தேவையான இடங்களுக்கு ஆசிரியர்கள் மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்தவர்கள் IFHRMS Post Mapping பிரச்சினையால் மூன்று மாதங்கள் ஊதியம் பெற முடியவில்லை. பின்னர் இந்த 3000 பணியிடங்களையும் தொகுத்து அரசாணை எண் 92/2022 நாள் 18/5/2022 இல் ஒரு ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டுக்கு ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டது. தற்போது அவர்கள் பணியில் சேர்ந்து ஓர் ஆண்டுகள் முடிந்துவிட்டபடியால் மார்ச், ஏப்ரல் 2023 மாதங்களுக்கான ஊதியம் பெற முடியவில்லை. இப்பொருள் சார்ந்து, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில், பார்வை 2 இல் காணும் கடிதத்தின் மூலம் உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டியிருந்தோம். தொடர் ஆணை கிடைக்க காலதாமதம் ஏற்படுவதால் தங்களின் அதிகாரத்தினை பயன்படுத்தி மூன்று மாதங்களுக்கு உரிய Pay Authorisation ஆணை அளித்து 3000 பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச். ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தினை பெற உதவிடவேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.