வருகைப்பதிவு இல்லாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 4, 2023

வருகைப்பதிவு இல்லாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் உத்தரவு



TNTEU — B.Ed./M.Ed./B.Sc.B.Ed./BA.B.Ed. Degree Examination, 2023 — Completion of Working days — Attendance call for — Reg

CLICK HERE TO DOWNLOAD PDF

வருகைப்பதிவு இல்லாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் உத்தரவு - Rs 1,000 fine for non-attendance: Tamil Nadu Teachers University orders

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூ.1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 பருவங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மே, ஜூன் மாதங்களிலும், 2 ம் பருவத்திற்கான தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வினை தனியார் கல்வியியல் (பிஎட்,எம்எட் ) கல்லூரிகளில் நடத்தாமல், அரசு, அரசு உதவிப்பெறும் அல்லது பிஎட் பட்டப்படிப்பினை நடத்தாக தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தப் பருவத்திற்கான தேர்வினை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) கணேசன், பிஎட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும், எம்எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் 3 வது பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 100 நாட்கள் வருகைப்புரிய வேண்டும். பிஎஸ்சி பிஎட், பிஏபிஎட் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள் 125 நாட்கள் வருகைப் புரிய வேண்டும். அவ்வாறு வருகைப் புரியாத மாணவர்களின் பட்டியலை வரும் 6 ந் தேதிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அனைத்து மாணவர்களும் பாடத்திட்டத்தை படித்திருக்கும் வகையில் 85 சதவீதம் வருகைப் புரிய வேண்டும். அவ்வாறு வருகைப் புரியாமல் 75 சதவீதம் முதல் 84 சதவீதம் வரையில் வருகைப் பதிவு உள்ள மாணவர்கள் அதற்கான மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என பல்கலைக் கழகத்தில் விதி உள்ளது.

மேலும் வருகைப் பதிவு குறைந்ததற்காக ரூ.1000 அபராத கட்டணம் செலுத்த வேண்டும். மருத்துவ விடுப்பில் சென்றதற்கான சான்றிதழ்கள் தற்பொழுது ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வழங்கப்பட வேண்டி உள்ளது. இதனால் சரியான காரணம் இன்றி மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிக்கல் ஏற்படுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுலவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளிலும் பொறுப்பில் இருக்கின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.