பிற மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 4, 2023

பிற மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி

பிற மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி விரைவில் வெளியீடு - Learning Tamil in Other Languages Shortcut

தமிழ் மொழியின் இனிமை, தமிழகத்தின் பெருமைகளை பிற மொழி பேசும் மக்களும் அறிந்து கொள் ளும் வகையில் திராவிட மொழிகள் உள்பட பிற மொழிக ளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி அகரமுதலி இயக்ககம் சார் பில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தச் செயலி விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழக அர சின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக் கக இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழைப்பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திரா விட மொழிகள் உள்பட பிற மொழிகளில் பாடநூல்களும் பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலி யும் உருவாக்கும் பணி அகரமுதலி இயக்ககம் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

@kalviseithi தமிழ் மொழியின் இனிமையையும், தமிழகத்தின் பெரு மையையும் மற்ற மொழியினரும் அறிந்துகொள்வதற்கான மொழிப் பாலமாக இருக்கும் இந்தக் குறுஞ்செயலியை கைப் பேசியில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய தென்னிந்திய மாநி லங்கள், நாட்டின் பிற மாநிலங்கள், வெளிநாட்டினர் தமிழ கம் வரும்போது யாருடைய உதவியும் இல்லாமல் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும், புகழ் பெற்ற இடங் கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும், அத்தியாவசிய சேவைகளைப் பெறவும் இந்தச் செயலி வழிகாட்டும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் செயலியை பதி விறக்கம் செய்து அதில் தங்களது மொழியில் கேள்வியெழுப் பினால் அதற்குரிய பதில் எழுத்து வடிவில் தமிழிலும், ஒலி வடிவில் பயனாளர்களின் தாய்மொழியிலும் வெளிப்படும்.

இந்த குறுஞ்செயலியில் தெலுங்கு, கன்னடம், மலையா ளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற் கள் அடங்கிய அகராதியும் உள்ளீடு செய்யப்படும்.

ரூ. 30 லட்சத்தில்:

இந்தக் குறுஞ்செயலியை அகரமுத லித் திட்ட இயக்ககம், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பில் வடிவமைத்து வருகி றது. இதற்காக மொழியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் புதிய சேவைகள் சிலவற்றையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் முடிந்த பிறகு திராவிட மொழிகளில் தமிழ் கற்றல் குறுஞ்செயலி வெளியிடப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.