கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் பட்டதாரி/முதுகலை ஆசிரியர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் /தொ.க.இயக்குனருக்கு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 19, 2023

கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் பட்டதாரி/முதுகலை ஆசிரியர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் /தொ.க.இயக்குனருக்கு கோரிக்கை

Request to the Commissioner of School Education/Director of Education to take action to grant extension of service till 31st May to the Graduate/Post Graduate teachers who retire in the middle of the academic year.

கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் பட்டதாரி/முதுகலை ஆசிரியர்களுக்கு / த.ஆசிரியர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் /தொ.க.இயக்குனருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளுதல் சார்பு பார்வை

1. பள்ளிக் கல்வித்துறை அரசாணை (நிலை) எண் 261 நாள் 20.12.2018

2 பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 115 நாள் 28.6.2022

மதிப்புமிகு ஐயா

பார்வை ஒன்று மற்றும் இரண்டில் உள்ள அரசாணைகளின் படி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் இறுதிவரை பணி நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பணி நீட்டிப்பு பெற்றுள்ள ஆசிரியர்களை வரும் 28ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்

அரசாணை எண் 115 பக்கம் எண் 2, பத்தி 6 இல், பணி நீட்டிப்பு பெற்றுள்ள ஆசிரியர்களை கல்வியாண்டின் இறுதி நாளில் பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மட்டுமே, வரும் 28ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்படுகிறது. இது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆசிரியர்களுக்கான கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள், மே 31 ம் தேதி அதுவரை நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி கட்ட பணிகள் மற்றும் புதிய கல்வி ஆண்டுக் கான ஆயத்த பணிகளை, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், மேற்கொள்வர். மாணவர்களுக்குகல்வியாண்டின் கடைசி வேலை நாளில் தேர்வுகள் முடிந்துவிட்டாலும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் தேர்வு முடிவுகளை வழங்குதல், பொது தேர்வு விடைத்தாள்களை திருத்துதல், போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளுகிறார்கள்.

தற்போதைய நிலையில், முது நிலை ஆசிரியர்களுக்கு, பள்ளி வேலை நாள் முடிந்தாலும், 'நீட்' தேர்வு பயிற்சி திட்டம், மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் நுழைவு தேர்வு வழிகாட்டி நிகழ்ச் சிகளிலும் ஈடுபட்டுள்ளனர் இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை பணிநீட்டிப்பு வழங்க ஆவண செய்ய தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள அதே நாளில், ஆசிரியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிடுவது, ஆண்டுகளாக பணியாற்றிய ஆசி ரியர்களுக்கு பல மன வேதனையை அளித்துள்ளது.எனவே கடந்த கால நடைமுறைகளை பின்பற்றியும் மே 31 ஆம் தேதி வரை பணிநீட்டிப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும். பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருப்பதால் இதில் தனி கவனம் செலுத்தி உடனடியாக முதன்மை கல்வி அலுவலர்களை /மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களை அறிவுறுத்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்)

பீபேட்ரிக் ரெய்மாண்ட் (பொதுச்செயலாளர்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.