விடை திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

விடை திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

Control for teachers in answer correction center - விடை திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொது தேர்வு முடிந்து, கடந்த, 11ம் தேதி முதல், 80க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த பணியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் தங்கள் சங்கங்களுக்கான ஆலோசனை கூட்டம், வளாக கூட்டம், நன்கொடை, ஆண்டு சந்தா வசூல் போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: விடை திருத்தும் முகாமில், ஆசிரியர்கள் குழுவில் பேசியபடியே விடைத்தாள் திருத்துவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெளியில் சென்று காலதாமதமாக வரக்கூடாது. ரகசியம் காக்க வேண்டிய பணி என்பதால், உணவு உண்பதற்காக முகாமை விட்டு வெளியே சென்று வருவது சிறந்த நடத்தையல்ல.

விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நடக்கும் வளாகத்தில், எந்த வித கூட்டமும் நடத்த அனுமதியில்லை.

முகாம் நடக்கும் வளாகத்துக்கு வெளியாட்கள் வருவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்வித் துறையை சேர்ந்தவர்களானாலும், சம்பந்தப்பட்ட இடத்தில் பணி ஒதுக்காவிட்டால், அங்கு வரக்கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.