4, 5 -ம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணை - 16 Districts Updated - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

4, 5 -ம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணை - 16 Districts Updated

வேலூர் மாவட்டம் தொடக்கக் கல்வி 2022-2023-ம் கல்வியாண்டு - தேர்வுகள் - 4 முதல் 8-ம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டு இறுதித் தேர்வு நடத்துதல் தேர்வுக் கால அட்டவணை வெளியிடுதல் - சார்பு

வேலூர் மாவட்டம், மாவட்டக்கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்:08.04.2023

பார்வை-1-ல் காணும் செயல்முறைகளில் அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 - 2023- ம் கல்வியாண்டில் 1-9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பார்வை-2-ல் காணும் செயல்முறைகளில் வெளியிடப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணையினைப் பின்பற்றி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டுத் தேர்வு பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணும் எழுத்தும் 1 முதல் 3 வரை தேர்வு ஏப்ரல் 17 முதல் 21 வரை - 4 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு- தேர்வு-ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24 வரை. மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித் தேர்வு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - திருவள்ளூர் மாவட்டம் - திருவள்ளூர் கல்வி மாவட்டம் 2022 - 2023 -ம் கல்வியாண்டு - தேர்வுகள் 4 முதல் 8-ம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதப்பீடு/ஆண்டு இறுதித் 'தேர்வு நடத்துதல் - தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல் - சார்ந்து

பார்வை (1) -ல் காணும் செயல்முறைகளில் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 -ம் கல்வியாண்டில் 1-9 -ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டுத் தேர்வு பின்வரும் கால அட்டவணைப்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் - நாள்.10.04.2023.

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பார்வையின்படி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணை பின்பற்றி இராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ ஆண்டு தேர்வு கீழ்காணும் கால அட்டவணையின்படி, நடைபெறும் என தெரிவிக்கலாகிறது..

1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள், தமிழ், ஆங்கிலம், மற்றும் கணக்குப் பாடங்களுக்கு 17.04.2023 முதல் 2104.2023 வரை எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் கட்டுக்களை தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்கு மேல் தினமும் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. தேர்வு இல்லாத நாட்கள் மற்றும் வேளைகளில் மாணவர்களுக்குத் திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்ட மாவட்டக்கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலரின் செயல்முறைகள் நாள்: 10.04.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.